Thursday, 25 June 2015

சகல கிருபையும் பொருந்திய தேவன்

இன்றைய தியானம்
‘சகல கிருபையும் பொருந்திய தேவன்’
1.பேதுரு 5:10 ‘கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவராக.’

பாடுகளைக் குறித்து வேதம் சொல்வது என்ன?
1.பேதுரு 3:17-18 ‘தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும். ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார். அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.’
1.பேதுரு 4:16 ‘ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.’
மூன்று விதமான பாடுகள் அனுமதிக்கப்படுகிறது :
சரீர பாடுகள், சிந்தையில் உண்டாகும் பாடுகள், ஆவிக்குரிய வாழ்வில் பாடுகள்.

பாடுகளினால் உண்டாகும் நான்கு நன்மைகள் :
1. பாடுகள் நம்மை சீர்ப்படுத்தும் (தாவீதின் பாடுகளினால் சங்கீதம், தேவ வார்த்தைகள் சீர்ப்படுத்தும்)
2. பாடுகள் நம்மை ஸ்திரப்படுத்தும் (ஜெபம் ஸ்திரப்படுத்தும்) 
லூக்.22:31-32 ‘பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன், நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.’
3. பாடுகள் நம்மை பலப்படுத்தும்
பிலி. 4:13 ‘என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.’
2கொரி.12:9 ‘என் கிருபை உனக்குப்போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்.’ 
4. பாடுகள் நம்மை நிலைநிறுத்தும்
‘கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மை பிரிப்பவன் யார்?’
‘நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும்…’
(உம்.: ரூத் வாழ்வு, துக்கமான ஆரம்பம் முடிவோ சம்பூரணம்) 
















No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord