ஒரு முறை உலகப்பிரசித்தி பெற்ற மூடி பிரசங்கியார் ஓய்வுநாள் பள்ளியில் வேத பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். திடீரென்று தனது இடது கரத்தில் கட்டியிருந்த தங்க கடிகாரத்தைக் கழற்றி, "இது யாருக்குவேண்டும்" என கேட்டார். எல்லா மாணவர்களும் சந்தேகப்பட்டனர். யாராவது தங்க கடிகாரத்தை இலவசமாக தருவார்களா என்ற சந்தேகம் எழுந்த காரணத்தினால் ஒரு மாணவன் கூட அதைப் பெற்றுக்கொள்ள முன் வரவில்லை. விளையாட்டுக்கு கேட்கிறார் என்று நினைத்தனர்.கடைசியில் ஒரு ஆறுவயது சிறுவன் முன் வந்து அதைப் பெற்றுக் கொண்டு "நன்றி ஐயா" என கூறி சந்தோஷத்துடன் கடிகாரத்தை மற்ற மாணவர்களுக்குக் காட்டினான். மூடி பிரசங்கியார், "இந்த கடிகாரம் எனக்கு எப்படி பிரயோஜனமாக இருந்ததோ அதே போன்று உனக்கும் பிரயோஜனமாக இருக்கட்டும்" என்று அவனை வாழ்த்தினார். இதைப் பார்த்த மற்ற மாணவர்களுக்கு ஒரே ஆச்சரியம். அவர்கள் அனைவரும் பிரசங்கியாரை நோக்கி; ""நீங்கள் உண்மையிலேயே அவனுக்குக் கொடுத்துவிட்டீர்களா?" எனக் கேட்டனர். அதற்கு அவர், "ஆம், அது அவனுக்குத்தான். ஏன் எனில் அவன் நான் சொன்னதை நம்பினான். இப்போது அந்த கடிகாரம் அவனுடையது" என்று கூறினார்.
நமது ஆண்டவர் விலைமதிக்க முடியாத ஒரு பரிசை தரவிரும்புகிறார். அதுதான், அவருடைய வெண்வஸ்திரம். இதற்கு விலையில்லை, இலவசம். இது நிச்சயம் நமக்கு தேவை என்று கிறிஸ்து வெளிப்படுத்தின புத்தகத்தில் ஆலோசனை கூறுகிறார். எவ்வாறு அந்த சிறுவன் மூடி பிரசங்கியாரின் வார்த்தைகளை நம்பினானோ அதே போன்று கிறிஸ்துவின் வார்த்தைகளை நம்புகிறயாவருக்கும் இந்த வெண்வஸ்திரம் பரிசாகத் தரப்படும். ஏன் எனில் அவர் என்றும் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1யோவான் 1:9). அந்த வஸ்திரம் இல்லாதவன் ஒருவனும் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. உங்கள் நிலை என்ன?
No comments:
Post a Comment