இன்றய செய்தி:"நான்கு அறிவுரைகள்"
1. கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்.
பிலிப்பியர் : அதிகாரம் 4 : 1
ஆதலால், எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்.
யோவான் : அதிகாரம் 15 : 7
நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
2.கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருங்கள்.
பிலிப்பியர் : அதிகாரம் 4 : 2
கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்.
அப்போஸ்தலர் : அதிகாரம் 2 : 1
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
3. கர்த்தருக்குள் உதவி செய்யுங்கள்.
பிலிப்பியர் : அதிகாரம் 4 : 3
அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.
கலாத்தியர் : அதிகாரம் 6 : 10
ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.
4. கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்
பிலிப்பியர் : அதிகாரம் 4 : 4
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
No comments:
Post a Comment