"அபிஷேகம் நிலைத்திருக்கிறது,போதிக்கிறது,நடத்துகிறது."
Acts 1: 8. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது. ஒருவரும் உங்களுக்கு போதிக்க வேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, அது பொய்யல்ல, அது உங்களுக்கு போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. – 1 யோவான் 2: 27
பிரியமானவர்களே, எரே.31:33-34ல் நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து; அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்றும், இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி கர்த்தரை அறிந்துக்கொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன் முதல் பெரியவன் மட்டும் எல்லாரும் என்னை அறிந்துக்கொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன் என்று கர்த்தர் கூறினார்.
பிரியமானவர்களே, இவ்வார்த்தையின்படியே ஆண்டவராகிய இயேசுவும் யோவான் 14:26ல் என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்கு போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் என்று தம் சீஷர்களுக்கு சொன்னார்.
இதை வாசிக்கும் பிரியமான சகோதரனே, சகோதரியே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது உண்மையானால், இயேசுவின் வார்த்தை உன் உள்ளத்தில் இருக்கும். அவர் அருளின பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே உங்களுக்குப் போதித்து, இயேசு சொன்ன எல்லாவற்றையும் அவ்வப்போது நினைப்பூட்டி உங்களுக்கு யோவான் 16:13படி சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். சகல ஞானத்திற்கும் காரணராகிய இயேசு, பரிசுத்த ஆவியின் மூலம் உங்களுக்கு கற்றுதந்து, நடத்துவார். கலங்காதிருங்கள்.
அப்போஸ்தலனாகிய யோவான், 1யோவான் 2:27ல் எழுதியிருக்கிறபடி இயேசுவிலும் அவருடைய பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திலும் நாமும். நம் குடும்பத்திலுள்ள யாவரும் நிலைத்திருக்க கர்த்தரிடம் கெஞ்சி மன்றாடுவோமா?
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களோடிருப்பாராக, உங்களை நடத்துவாராக.
No comments:
Post a Comment