Friday, 26 June 2015

இன்றைய தியானம் : "நான்கு அறிவுரைகள்."

இன்றைய தியானம் : "நான்கு அறிவுரைகள்."
உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் காலை வணக்கங்கள்.
ஜெபம் : எங்கள் அன்பின் ஆண்டவரே,இந்த நாளைக் காண கொடுத்த மகா பெரிய கிருபைக்காக மிக்க நன்றி.
கர்த்தாவே,இந்த குழுமத்தில் உள்ள அனைவரையும் ஆசிர்வதியும்.ஒவ்வொரு வாலிப சகோதர,சகோதரிகளையும் அவர்களுக்கு நல்ல எதிர் காலத்தை நீர் வைத்திருக்கீறிர்.இயேசுவின் நாமத்தில் கடன் பிரச்சனைகள்,வியாதிகள்,பலவீனங்கள் நீங்குவதாக.
ஆமென்.
1.என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
யோவான் : அதிகாரம் 15 : 5
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
2. இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
எபிரெயர் : அதிகாரம் 9 : 22
நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
3. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; 
எபிரெயர் : அதிகாரம் 11 : 6
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
4. பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
எபிரெயர் : அதிகாரம் 12 : 14
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
II கொரிந்தியர் : அதிகாரம் 13 : 14
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord