Saturday, 27 June 2015

"ஐந்து அறிவுரைகள்"


"ஐந்து அறிவுரைகள்"
1. கோலை தரையிலே போடு.
யாத்திராகமம் : அதிகாரம் 4 : 2 
 கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.
யாத்திராகமம் : அதிகாரம் 4 : 3 
 அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகி ஓடினான்.
2. கையை மடியிலே போடு.
யாத்திராகமம் : அதிகாரம் 4 : 6 
 மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது.
யாத்திராகமம் : அதிகாரம் 4 : 7 
 அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப் போலாயிற்று.
3. ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு.
பிரசங்கி : அதிகாரம் 11 : 1 
 உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.
4. வலையை ஆழத்திலே போடு.
லூக்கா : அதிகாரம் 5 : 4 
 அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.
5. கர்த்தர் மேல் உன் பாரத்தை போடு.
சங்கீதம் : அதிகாரம் 55 : 22 
 கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord