Friday, 26 June 2015

தியானம் :"இயேசு கிறிஸ்து பெரியவர்."

தியானம் :"இயேசு கிறிஸ்து பெரியவர்."
அன்பில் பெரியவர்,ஞானத்தில் பெரியவர்,பெலத்தில் பெரியவர்,யோசனையில் பெரியவர்.
கர்த்தர் பெரியவர்.
நீ சந்திக்கிற எல்லாப் பிரச்சனைகள்,தேவைகள்,வியாதிகள்,பலவீனங்கள்,போராட்டங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் கர்த்தர் பெரியவர் என்று அறிக்கையிடும் போது கர்த்தர் நிச்சயம் உன் எல்லா சூழ் நிலைகளையும் மாற்றுவார்.
1. சகல தேவர்களைக் காட்டிலும் பெரியவர்.
சங்கீதம் : அதிகாரம் 135 : 5 
 கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
2. ஆபிரகாமைக் காட்டிலும் பெரியவர்.
யோவான் : அதிகாரம் 8 : 58 
 அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
3. தேவாலயத்திலும் பெரியவர்.
மத்தேயு : அதிகாரம் 12 : 6 
 தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
4. யோனாவிலும் பெரியவர்.
மத்தேயு : அதிகாரம் 12 : 41 
 யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
5. சாலொமோனிலும் பெரியவர்.
மத்தேயு : அதிகாரம் 12 : 42 
 தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
6. இருதயத்திலும் பெரியவர்.
I யோவான் : அதிகாரம் 3 : 20 
 நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
7.உங்களிலிருக்கிறவர் பெரியவர்..
I யோவான் : அதிகாரம் 4 : 4 
 பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord