Wednesday 8 July 2015

தியானம்;"ஒவ்வொரு நாளுக்குமான வலிமை"

தியானம்;"ஒவ்வொரு நாளுக்குமான வலிமை"
"உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும்"
உபாகமம் 33 :25 
 I) கடவுளிடம் ஜெபிப்பதன் மூலமாய் வரும் வலிமை:
" மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் "
மத்தேயு 21 :22 
 பல கிறிஸ்தவர்கள் பலத்தில் குறைவுபட்டவர்களாக இருப்பதன் காரணம், அவர்கள் ஜெப வாழ்வில் அலட்சியமாக  இருப்பதுதான். 
ஜெபமே கிறிஸ்தவர்களின்  வாழ்வாதாரமாகும். ஜெபத்தின் மூலமாக நாம் கர்த்தருடன் தொடர்பு வைத்துக் கொள்ளவும்,ஐக்கியப்பட்டிருக்கவும் முடியும். வேதம்  அறிவுறுத்துகிறது , 
" நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
பிலிப்பியர் 4 :6 
 II) கர்த்தருடைய வாக்குத் தத்தங்களின் மூலமாக வரும் வலிமை :
"நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன் "
ஏசாயா 41 :10 
  சில கிறிஸ்தவர்கள் பலத்தில் குறைவுபட்டவர்களாக இருப்பதன் காரணம்  அவர்கள் கர்த்தரின் வாக்குத்தத்தங்களை அலட்சியப் படுத்துவதுதான்.
நம்முடைய தேவைகளுக்குப் பொருத்தமான கர்த்தரின்  வாக்குத்தத்ங்களைத் தேடிப்பிடித்து ,  அவற்றை நினைவில் நிறுத்தி,  மீண்டும்  மீண்டும்  அவற்றை அறிக்கையிட்டு , நமக்கு உரிமையான  ஒன்றினைப் போல் கேட்க வேண்டும். நமக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது,
" இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
 2 பேதுரு 1 :4 
III) கர்த்தருக்கான காரியங்களை நிறைவேற்றுவதன் மூலமாகக் கிடைக்கும் வலிமை :
 "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு".
பிலிப்பியர் 4 :13 
கிறிஸ்தவர்கள்  இறைப்பணி செய்வதன் மூலமாக வலிமையைப் பெற்றுக் கொள்கிறார்கள். 
பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி  அவர்களது பணிகளை அவர் வாய்க்கச் செய்து அவர்களைப் பெருமைப் படுத்துகிறார்.
பலர் தங்களது சொந்தக் காரியங்களில்  ஈடுபடுவதிலேயே ஆர்வம் செலுத்துவதால் கர்த்தருடைய காரியங்களை செய்யத் தவறிவிடுகிறார்கள். கர்த்தருக்கென நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். 
அவர் நமக்கு வாக்களித்திருக்கிறபடி
"சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்"
  ஏசாயா 40 :29 
IV)  கர்த்தரைத் துதிப்பதன் மூலமாக வலிமையைப் பெற்றுக் கொள்ளுதல் :
" நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்..... கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன் .
சங்கீதம் 71 :14 & 16 
இதனைத் சொன்ன பிறகு அவர் கர்த்தரை இன்னும் அதிகதிகமாய்த் துதித்திருக்க வேண்டும். சங்கீதக்காரன் சொல்கிறார் , " நான் கர்த்தருடைய பெலத்திலே நடப்பேன் ". 
நாம் கர்த்தரைத் துதிப்பதன் மூலமாக வலிமையைப் பெற்றுக் கொள்கிறோம். துதி நம்மிடம் நன்மைக்கேதுவான மனப்பான்மையைத் தூண்டி விட்டு, நம்முடைய தொய்ந்த ஆவியை உயிர்ப்பிக்கிறது. 
கர்த்தர் நம்முடய  அனைத்துத் துதிகளுக்கும் பாத்திரமானவர். அவரைப் போதுமான  அளவிற்குத் துதித்து முடிக்க நம்மாலே முடியாது. 
சங்கீதக்காரன் சொல்கிறார், 
" அவர் துதி எப்போதும்  என் நாவிலிருக்கும் " 
(சங்கீதம் :34:1)


No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord